நல்வாழ்த்து:
கண்டு நம்பும் மாந்தர் உண்டு;
காணா இறையை நம்பிடுவோம்.
உண்டு ருசிக்கும் விருப்பு கொண்டு,
ஊட்டும் இறையைக் கும்பிடுவோம்!
நல்வாக்கு:
மத்தேயு 26:55-56.
“அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘ கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன ‘ என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.”
நல்வாழ்வு:
இக்கட்டு, துன்ப வேளையிலே,
எத்தனைபேர் நம் உடனிருந்தார்?
பக்கத்தில் வந்து பார்த்தவரே,
பாய்ந்து அம்பாய்ப் பறந்துவிட்டார்!
திக்கற்று நாம் நிற்கையிலே,
தெய்வம் மட்டும் துணை வந்தார்.
எக்காலத்தும் நினைப்பீரே;
இறைவன் நம்முடன் இருக்கின்றார்!
ஆமென்.