இருளா? ஒளியா?
இறை வாக்கு: யோவான் 12:34-35.
இறை வாழ்வு:
இருளா? ஒளியா? என்று கேட்டால்,
இருள் வேண்டாம் என உரைப்பரும்,
அருளா? பொருளா? என்று கேட்டால்,
அறியாதவராய் முறைக்கிறார்!
பொருள் தேடுலகில் புறம்பே சொல்லும்,
பொய் நிறை வாக்கு இறைப்பரும்,
மருளகலாத மனதின் இருளால்,
மறைக்கு எதிராய்க் குரைக்கிறார்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.