இயேசுவும் நானும்!
இறை மொழி: யோவான் 19:17.
17. அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
ஈராயிரம் அடிகள் அன்று,
இயேசு சுமந்த சிலுவை.
தேறாதவர் மீள்வர் என்று
தெரிவிக்கும் பொறுமை.
ஆறாத சினத்தில் இன்று,
அதிர வைக்கும் செய்கை
பேராசான் முன்பு நின்று,
பேசும் என் வெறுமை!
ஆமென்.