ஆயரே, ஆண்டவரே!

நல்வாழ்த்து:
ஆட்டை மேய்க்கும் ஆயன்போல்
ஆண்டவர் தருவதில் மகிழ்வாயே.
வேட்டையாடுதல் விட்டு விட்டு,
விண்ணின் விருப்பில் தொழுவாயே!
நல்வாக்கு: மத்தேயு 26:29-30.
இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.”
 
நல்வாழ்வு:
துன்பக் குவளை கையினிலே;
நன்றிப் பாவோ வாயினிலே!
என்னில் இல்லா இப்பண்பே,
உன்னில் கண்டு கேட்டேனே!
முன்பு நானும் நோவினிலே,
சொன்னவையோ சுடுமொழியே.
இன்று எண்ணி வருந்துகிறேன்;
மன்னிப்பாயா இறைமகனே!
ஆமென்.
 Jesus-Good-Shepherd-guides-me

Leave a Reply