வேண்டத் தெரியேன்

நல்வாழ்த்து:
வேண்டத் தெரியா எளியனுக்கு,
வேண்டுதல் செய்யும் இறைமகனே,
பாண்டித் தமிழால் உனைப் பாடி
பாராட்டிட நான் வந்தேனே.
தோண்டத் தோண்டப் பெருகிவரும்,
துரவின் தெளிந்த நீரைப்போல்
மீண்டும் மீண்டும் வாக்கருளி,
மீட்பதோ உனது திருக்கடனே!
Desert Water Mobile Wallpaper

நல்வாக்கு: மத்தேயு 26:26-28.

ஆண்டவரின் திருவிருந்து
”அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ‘ இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் ‘ என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ‘ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.”
நல்வாழ்வு:

உம்முடல் உணவாயிற்று;
உதிரமோ சாறாயிற்று;
நம்பினேன் வாக்கைப் பெற்று;
நன்மையே உண்டாயிற்று!
தம்முடல் வாழ்விற்கென்று
தவற்றினை உண்போர் இன்று,
செம்பொருள் அறிதல் நன்று,
சிலுவையின் அன்பினின்று!
ஆமென்.

 

Leave a Reply