நல்வாக்கு: மத்தேயு 27: 11
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்”இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்டான். அதற்கு இயேசு, ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று கூறினார்.”

நல்வாழ்வு:
நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைக்கும்,
நன்மை யற்றோர் அரசரெனில்,
கேட்டை ஒழித்து, கூட்டை ஆளும்
கிறித்து நமக்கு வேந்தனன்றோ?
கோட்டை கொத்தளம் ஏறி இறங்கி,
கிறித்து அரசரைத் தேடாதீர்.
ஏட்டில் இறைவன் எழுதிய உண்மை
என்றும் ஆள இடங்கொடுப்பீர்!
ஆமென்.