அனைத்துமே கீழடங்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:39
“அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ‘ இரையாதே, அமைதியாயிரு ‘ என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.”
நற்செய்தி மலர்:
காற்றடங்கும், கடலடங்கும்,
கடும் புயலும் வலுவடங்கும்,
நேற்று நம்மைத் தூற்றியவர்
நெய்த பழிச் சொல்லடங்கும்.
ஏற்றமிகு இறைமகனார்
இயம்புகின்ற வாக்கின் முன்,
ஆற்று வெள்ளம் ஓடுதல் போல்,
அனைத்துமே கீழடங்கும்!
ஆமென்.