விண்ணூழியரே அள்ளாதீர்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:4.
4 | பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். கிறித்துவின் வாழ்வு: காசுக்கென்றும் பொருளுக்கென்றும் கடவுள் நாடி வருவோர்கள், பேசும் தெய்வ வாக்கு கேளார்; பையை நிரப்பிக் கொள்ளாதீர். மாசுக்குற்றம் மலிந்த நெஞ்சம் மாற வேண்டிக் கேட்போர்கள், வீசுவார்கள் காசைத் தூசாய்; விண்ணூழியரே, அள்ளாதீர்! ஆமென். |