யார் நம் உறவு?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:19-21.
19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
20 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
யார் நம்மோடு இருப்பார் என்றால்,
அண்ணன் தம்பியர் வருவதில்லை.
ஊர் பண்பாடும் உறவின் உயர்வாம்
அன்னையும் உதவி தருவதில்லை.
பார் படைத்தவரின் பணியினில் சேர,
பலருக்கு இன்று எண்ணமில்லை.
சீர் மிகு செய்தியாய் வாழ்வார் உறவே
சிறந்தது, வேறு மண்ணிலில்லை!
ஆமென்.
