நேர்மையே வேண்டும்!

 

விண்முட்டும்  நேர்மையே வேண்டும்!
உண்பதற்காகக் கொல்பவருண்டு;
கொல்வதற்காகவும் உண்பவருண்டு.
கண்முன் நிற்பவர் யார் எவரென்று,
கலங்கும் நானும் அறியேன் இன்று.
பண்பட்ட உள்ளம் எங்கு உண்டு?
பார்ப்பவர் அளக்கிறார் பணத்தைக் கொண்டு.
விண்முட்டும் நேர்மையே நன்மை என்று,
விரும்பும் இறையே, தருவாய் இன்று!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply