வேண்டுதல் கேளும்!

வேண்டுதல் கேளும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:1.

1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
வேண்டும் தகுதியும் எனக்கில்லை;
வெளியில் கூறவும் மனமில்லை.
மீண்டும் உம்மிடந்தான் கேட்பேன்;
மீட்பின் திட்டந்தான் ஏற்பேன்.
ஆண்டுகள் பற்பல கடந்திடினும்,
அவற்றுள் தடைகள் கிடந்திடினும்,
மாண்டு போமோ இறைப்பற்று?
மன்னன் இயேசுவே எனைப்பற்று!
ஆமென்.

Leave a Reply