வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!
எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்
இந்திய நாட்டில்
குறைந்திட்டார்.
கள்ள வழியில்
கலப்படம் செய்து
காசு சேர்ப்போர்
நிறைந்திட்டார்.
கொள்ளையிடுதல்
தவறு என்று
கூறி வாழ்வோர்
குறைந்திட்டார்.
வெள்ளை நிறத்துக்
கல்லறையினையும்
வீடு என்பார்
நிறைந்திட்டார்.
-கெர்சோம் செல்லையா.