வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
நற்செய்தி மாலை: மாற்கு:9:42.
” என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.”
நற்செய்தி மலர்:
ஏழைக் கிறித்தவர் இயலார் என்று
ஏளனமாகவே எண்ணுகிறார்.
கோழைத்தனமென தாழ்மையை நினைத்துக்
கொலையும்கூட பண்ணுகிறார்.
நாளை விளைவது இன்றைய வித்து;
நம்பாதவர் இவர் புதைக்கின்றார்.
வேளை வரும்போதிவரும் அறுப்பார்;
வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
ஆமென்.