விருந்து கொடுப்பார் உள்ளம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:43-46.
43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
44 ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என்கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45 நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
கிறித்துவில் வாழ்வு:
விருந்து கொடுப்பார் நெஞ்சத்தை,
விண்ணின் அரசர் புரிந்துள்ளார்.
இருந்து போங்கள் என்பாருள்,
இருக்கும் நஞ்சும் அறிந்துள்ளார்.
திருந்துவாரின் செயல்பாட்டைத்
தெரிந்து தெய்வம் அழைத்துள்ளார்.
அருந்துவோம் நாம் அவரன்பை;
அழைப்பை ஏற்றார் தழைத்துள்ளார்!
ஆமென்.