விரிப்பவர் விழுமிடம் வலையே!
சத்ரியர் செய்வதும் கொலையே;
சூத்திரர் ஆயினும் கொலையே.
பத்திரமாகத் தம்மைக் காக்கும்,
பார்ப்பனர் செய்யினும் கொலையே.
இத்தரைப் புவியின் கொலையே,
ஏழைக்கு மாற்றினாய் நிலையே.
வித்தகராகத் தம்மை எண்ணி,
விரிப்பவர் விழுமிடம் வலையே!
-கெர்சோம் செல்லையா.

