விண்ணின் தூதர்போல்….
நற்செய்தி மாலை: மாற்கு 12:24-27.
“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? ‘ ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே ‘ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
விண்ணின் தூதர் எப்படி இருப்பார்?
விளக்கம் சொல்ல அறியேன் நான்.
கண்ணில் காணும் படம்போல் எழுத,
கற்பனைகூடத் தெரியேன் யான்.
எண்ணம் கடந்த இந்த அறிவை ,
இறைப்பற்றாலே புரிவேன் நான்.
மண்ணைவிட்டுப் பிரியும்போது,
மாற்றம் கண்டு அறிவேன் யான்!
ஆமென்.