விண்ணின் குரல்!

விண்ணின் குரல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:21-22.
21 ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

கிறித்துவில் வாழ்வு:
எதைக் கேட்க விரும்புகிறாய்?
எப்படிக் காதைத் திருப்புகிறாய்?
உதை பந்தாய் ஓடுகிறாய்;
ஒன்றுமின்றி வாடுகிறாய்.
விதை போன்றது இறை வாக்கு.
விரும்பி நெஞ்சில் நீ வாங்கு.
கதையாகும் உன் வாழ்க்கை;
கனிய வைக்கும் நம்பிக்கை!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply