விண்ணப்ப வீடே இறைவீடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:45-46.
45 பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
46 என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
விண்ணப்ப வீடே இறைவீடு;
விருப்பம் கூடும் நிறைவோடு.
நன்னப்பர் அருளும் அன்போடு,
நலம்பெற நாளும் மன்றாடு.
பொன்னப்பரென்ற சிலரோடு,
பொய்மை வரவே பலகேடு.
மன்னிப்பு தருகிற மொழியோடு,
மனதைச் சேர்ப்பதே வழிபாடு!
ஆமென்.