விடைக்குள் வராத விருப்பம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:12-13.
12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
கிறித்துவில் வாழ்வு:
படைக்கப்பட்டதில் நோக்கமுண்டு;
படைத்த இறையிடம் கேட்டிடுவோம்.
கிடைக்கப்பெற்றதில் நோக்கமுண்டு;
கிறித்து அற்றதை விட்டிடுவோம்.
உடைக்கப்பட்டதில் நோக்கமுண்டு;
ஒற்றுமை ஆவியுள் கூட்டிடுவோம்.
விடைக்குள் வராத ஏக்கமுண்டு;
விண்ணரசரிடம் காட்டிடுவோம்!
ஆமென்.