விடுதலை நாள் வாழ்த்து!
விடுதலை விருந்தை யாவரும் ருசிக்க,
விறகாய் எரிந்தோர் மறைந்திட்டார்.
நடுநிலை தவறி, ஒருசிலர் புசிக்க,
நாட்டை விற்போர் நிறைந்திட்டார்.
கெடுதலை உணர்ந்து, கீழோர் உயர,
கடுமையாய் உழைப்போர் குறைந்திட்டார்.
அடுத்தவர் வாழ, அன்பைப் பகிர்ந்தால்,
அப்பெரு நாட்டை முறைப்போர் யார்?
-கெர்சோம் செல்லையா.
