வாழ்வு வந்தபோது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:1-2.
1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
கிறித்துவில் வாழ்வு:
தாழ்வு நோக்கிப் பெயர்கையிலே
தாங்கும் என்று அழுதவர்கள்,
வாழ்வு வந்து உயர்கையிலே,
வறியரை நினைக்கலையே.
ஏழ்மையென்று வெறுக்கையிலே,
இறைநிழலை மறுப்பதனால்,
கீழ்மையுற்று வருந்திடுவார்;
கிறித்தவரும் உணரலையே!
ஆமென்.