இறைப் பற்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18: 42.
42 இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
தூற்றுவோரால் துயருறும்போதும்,
தொற்று நோயால் அயர்கிறபோதும்,
ஏற்றமேற முயல்கிறபோதும்,
எனக்கு வலிமை இறைப்பற்று.
மாற்றுகின்ற அருமருந்தாகும்;
மாறுகையில் திருவிருந்தாகும்.
தோற்று போகாப் பேரறிவாகும்;
தோழா, நீயும் இதைப் பற்று!
ஆமென்.