வாழ்வாம் விருந்து!

வாழ்வெனும் விருந்து!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:15-17.

15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.16 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.17 விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:

திருந்துகின்ற வாழ்வில் இன்று,

தேவையற்றத் திருத்தங்கள்.

மருந்து என்று அவையும் தந்து,

மாற்ற முயல்வார் வருத்தங்கள்.

குருசு சுமக்கும் அடியவருக்கு,

கிறித்தவ வாழ்வோ மகிழ்வாகும்.

விருந்து போன்று அதைப்புசித்து,

விருப்பம் செய்தால் புகழாகும்!

ஆமென்.

Leave a Reply