வாய்மையின் அருட்திட்டம்!
நற்செய்தி: யோவான் 1:16-17.
நல்வழி:
தூய்மைப் படுத்தும் திருச்சட்டம் ஈந்தீர்.
தூது கொடுக்கும், மோசேயும் தந்தீர்.
வாய்மை குறையவே அருட்திட்டம் வகுத்தீர்;
வாழ்ந்து காட்டவே உம்மையும் பகுத்தீர்.
தேய்மை ஆளும் எங்களைக் கண்டீர்;
தெளிவில் வாழும்படிக்குக் கொண்டீர்.
தாய்மை நெஞ்சில் அன்புடன் ஏற்பீர்;
தமிழருயர உம்முடன் சேர்ப்பீர்!
ஆமென்.
-செல்லையா.