வாக்கில் வல்லமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா4:31-32.
31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.
32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
யாழின் நரம்பு முறுக்கானால்,
இன்னிசை, பாடல் நாக்கில் வரும்.
வாழ்வில் நேர்மை உருக்கானால்,
வாய்மை, வல்லமை வாக்கில் வரும்.
தூளின் எழுச்சி இரைவதுபோல்
தோன்றி மறையும் நம்வாக்கால்,
தாழும் மதிப்பை நாம் புரிந்து,
தவற்றை விடுவோம், வாழ்வுவரும்!
ஆமென்.