யோனாவின் முன்னடையாளம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:29-30.
29ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. |
30யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். கிறித்துவில் வாழ்வு: மூன்று நாட்கள் மீனின் வயிற்றில், முன்பு யோனா இருந்ததுபோல், சான்று கேட்கும் சந்ததியார்க்குச் சாவை வென்றவர் இருந்தாரே. தோன்றுகின்ற அறியாமையினால், துணிகரக் கேள்வி கேளாமல், ஊன்றுகோலென வாக்கைப் பிடித்தோர், ஒரு நாள்கூட வருந்தாரே! ஆமென். |