யார் பெரியவர்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:27-28.
27 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.
28 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
தன்னைத்தானே உயர்த்தும் உலகில்,
தாழ்மை அணிந்து மொழிபவர் யார்?
முன்னே பின்னே அறியாதவர்க்கும்,
முக அக அன்பைப் பொழிபவர் யார்?
இன்னாள் ஊழியர் யோவான்போன்று
எளிமை கொண்டால் உயர்ந்திடுவார்.
சொன்னால் கேட்க மறுத்து முரண்டால்,
சோதனை நாளில் அயர்ந்திடுவார்!
ஆமென்.