யாரால் கூடும்?

யாரால் முடியும்? 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18 :26-27.

26  அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

27  அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

மண்ணுள் சென்று பொன்னை எடுத்தோம்;

மறைந்திருந்த கனிவளம் கொடுத்தோம்.

விண்ணில் சென்று நிலவில் நடந்தோம்;

வேறுகோளமும் நோக்கிக் கடந்தோம்.

எண்ணம் போன்று யாவும் முடித்தோம்;

எதைக்கேட்டாலும் அதைப் பிடித்தோம்.

ஒன்றை மட்டும் முடியாதென்றோம்;

இயேசு முடித்தார், மீட்படைந்தோம்!

ஆமென்.

Leave a Reply