மொத்தமும் பிடிக்க ஓடுகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:9-10.
9 பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10 அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
குத்தகை தந்த இறை மறந்து,
கொடுக்கும் அளவில் நிறை குறைந்து,
மொத்தமும் பிடிக்க ஓடுகிற,
மூடர்தானே பெருகுகிறார்.
இத்தரை மாந்தரின் மீட்பிற்கு,
எத்தனை எத்தனை ஊழியர்கள்,
நித்தமும் இங்கு பணிபுரிந்தும்,
நேயமுள்ளவர் அருகுகிறார்!
ஆமென்.