யோவான்
நல்வழி: 6:41-42.
முன்பு நின்று பேச மறுப்பார்;
மூக்கு திருப்பி முறு முறுப்பார்.
நன்கு இவரைப் புரிந்திருப்பார்,
நட்பு கொள்ளவும் வெறுப்பார்.
அன்று யூதர் முறு முறுத்தார்.
அழிவு காண இறை மறுத்தார்.
சென்று போன நிகழ்வறிந்தார்,
சிறிதளவும் முறு முறுக்கார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.