மும்மொழிகள்!

மூன்று மொழிகள்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 38.  
38  இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.  

கிறித்துவில் வாழ்வு:  
மூன்று மொழிகளில் எழுதி வைத்தார்,  
முள்முடி வேந்தனின் வெளிப்பாட்டை.  
தோன்று மொழிகளை நாம் மதித்தால்,  

துயருந் துவட்டுமோ இந்நாட்டை?  
சான்று இதுவென நான் உரைத்தால்,  

சண்டைக்கெடாதீர் இப்பாட்டை.  
ஈன்று எடுக்கிற இறையறிவால், 
எங்கும் ஒழியும் மொழிவேட்டை!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply