முதலில் மதிக்கத் தொடங்குவோம்!
வயலில் வேலை
செய்தால்தான்,
வாய்க்குச்சுவையாய்,
சோறு வரும்.
வருவாய் இல்லை,
விட்டு விட்டால்,
வாழ நமக்கு
ஏது தரும்?
முயலும் உழவன்
முன் வந்தால்,
முதலில் மதிக்கக்
கற்று விடும்.
முற்காலத்துப்
பிழை நீக்கி,
முற்றும் நன்மை
பெற்று எடும்!
(கெர்சோம் செல்லையா)