முடியாதெனத் தடுக்கும் மலையை…..
நற்செய்தி மாலை: மாற்கு 6: 50-52.
“ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ‘ துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ‘ என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.”
நற்செய்தி மலர்:
அடியார் என்றே நாமிருந்தாலும்,
அடிக்கடி மறந்து அஞ்சுகிறோம்.
இடியாய்த் துன்பம் எதிர்க்கும் நாளில்,
இடிந்து போய் நாம் கெஞ்சுகிறோம்!
துடியாய்த் துடிப்பதை நிறுத்திவிட்டு,
தெய்வம் சொல்வதைக் கேட்டிடுவோம்.
முடியாதெனத் தடுக்கும் மலையை,
மும்மை இறையால் ஓட்டிடுவோம்!
ஆமென்.