மற்றொரு உறவைத் தேடல்…

மற்றொரு உறவைத் தவறாய்த் தேடல்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:10-12.
“பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, ‘ தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்’ என்றார்.”
நற்செய்தி மலர்:
மற்றொரு உறவைத் தவறாய்த் தேடல்,
மாபெரும் குற்றம் தெரிந்திடுவீர்.
கற்றவர்கூட கறை படிந்துள்ளார்;
கண்ணீருடனே திருந்திடுவீர்.
பற்றும் உறுதி கிறித்துவில் இருந்தால்,
பண்பின் வாழ்வை விரும்பிடுவீர்.
குற்றம் நீங்கித் தூய்மையில் வளர்வீர்;
குருசை நோக்கித் திரும்பிடுவீர்!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

Leave a Reply