மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:3-5.
3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமேதவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4 தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
உணவின்றி வாடும் ஏழையைக் கண்டும்,
உதவாதிருத்தல் பெருங்கேடு.
பணம் பொருள் நிறைந்த வீடானாலும்,
பசியாற்றலையேல் சுடுகாடு.
குணம் என்று சொன்னால் கிறித்து போலாம்,
கொடுப்பதின் இன்பம் நீ தேடு.
மணத்தின் அருமை, பிணத்தில் தெரியும்!
மகனே, மகளே, இரங்கிவிடு!
ஆமென்.