புத்தாண்டு வாழ்த்து!


 
இறைமகன் திருப்பெயரால்
இனிய புத்தாண்டில் மகிழுவோம்.
குறைவிலா இன்பம் கூடவே இருக்கும்;
குறி தவறா வாழ்க்கை வாழுவோம்!
-செல்லையாவும் வீட்டாரும்,
இறையன்பு இல்லம்,
செக்ரெட்டேரியட் காலனி,
இரட்டை ஏரி, சென்னை-99.
நாளைய நிகழ்வு!
நற்செய்தி மாலை: மாற்கு13:3-4.
“இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, ‘ நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும் ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
நான்கு அடியர் கேட்டபோது,
நாளைய நிகழ்வை முன்னுரைத்தீர்.
ஏங்குபவர்கள் இன்றும் கேட்க,
இரண்டாம் வருகையை நன்குரைத்தீர்.
தாங்குபவராய் நீர் இருப்பதனால்,
தடுமாறாது நடக்கின்றோம்.
தூங்குவோரைத் தட்டி எழுப்ப,
தூயவாக்கால் கடக்கின்றோம்!
ஆமென்.

Leave a Reply