பிள்ளைபோல் வாழ்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:46-48.
46பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று. |
47இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, |
48அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். கிறித்துவில் வாழ்வு: பிள்ளை ஒன்றைத் தூக்கி எடுத்து, பெரியோர் இவரே என்றுரைத்தீர். இல்லை இவரில் கள்ளம் செருக்கு; இதுபோல் வாழென நன்குரைத்தீர். வெள்ளை அடித்தக் கல்லறையாக, வெளியில் மட்டும் காட்டுகின்றேன். உள்ளம் கழுவும் உண்மை இறையே, உம்மிடமே எனை நீட்டுகின்றேன்! ஆமென். |