உலகில் வந்த நோக்கம் அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:30-32.
“அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ‘ மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.”
நற்செய்தி மலர்:
என்றோ ஒரு நாள் இறப்பது அறிவோம்.
என்று எப்படி என்பதை அறியோம்.
இன்று இதனைத் தெரியார் போன்று,
அன்று அடியார் நின்றதும் அறிவோம்.
ஓன்று மட்டும் தெரிந்து கொள்வோம்.
உலகில் வந்த நோக்கம் தெளிவோம்.
தொன்று தொட்டு ஆளும் இறையின்
தூய திட்டம் புரிந்து வாழ்வோம்!
ஆமென்.