மனிதம் பிரிக்கும் மடையோரே!
நற்செய்தி: யோவான் 4:39-40.
39. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
40. சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.
நல்வழி:
இரு பத்து நூறு ஆண்டுகள் முன்பு,
யூதரில் இருந்த இனவெறியின்,
மறு பதிப்பென்று சாதியை வைத்து,
மனிதம் பிரிக்கும் மடையோரே,
ஒரு குலமாக இணைவீர் என்று,
இயேசு தருகிற இறையன்பின்,
திருவடி கண்டு, திருந்துவோர்தான்,
தெய்வப் பண்பு உடையோரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.