பாறையில் விழுந்தவை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:13.
13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
சொல்லை அழகாய்ப் பாடலாக்கிச்
சொன்னால், ஆமாம் என்றிடுவார்.
கல்லைக் காட்டும் நெஞ்சம் மறைத்துக்
கயமையின் கூட்டாய் நின்றிடுவார்.
இல்லை இவரில் நன்மை என்று,
எளியோர் வருந்திச் சென்றிடுவார்.
எல்லாம் அறிந்த இறைவன் ஒருநாள்,
யாவையும் பொடித்து வென்றிடுவார்!
ஆமென்.