பலியாடு பாரீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:7-9.
7 பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.
9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அழிக்காது ஆண்டவர் கடக்க,
ஆட்டை அடித்தார் அன்று.
பலிக்கான ஆடாய்க் கொடுக்க,
பரமன் வந்தார் இன்று.
வலிக்காது நாமும் நடக்க,
நம்மைக் கொடுப்பது என்று?
விழிக்காது வீழ்தல் தடுக்க,
வேண்டுவதுதான் நன்று!
ஆமென்.
-செல்லையா.