பயனற்ற பணியாளன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:7-10.
7 உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
8 நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
9 தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
கடமையைச் செய்த மகிழ்ச்சிகூட
கயவன் எனக்கு வரவிலையே.
உடமைகள் தேடி ஓடினதாலே,
ஊழியப் பொறுப்பும் தரவிலையே.
மடமையில் விழுந்த அடியனை மீட்டு,
மன்னா பொழிந்தீர் செம்பொருளே.
தடைகள் இட்டுத் தடுப்பவரெனினும்,
தமிழால் மொழிவேன் உம்மருளே!
ஆமென்.