படவில் அமர்ந்து உரைத்த செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:1-3.
1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள்.
3 அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
கிறித்துவில் வாழ்வு:
படவில் அமர்ந்து, பரமன் உரைத்த,
பழம்பெரு செய்தி கேட்டீரா?
உடம்பில் ஒட்டா உலகப் பொருட்கள்,
ஒழிவதும் காண மாட்டீரா?
சடங்கின் வழியாய் மீட்பைப் பெறுதல்,
சரியாகாதென அறிவீரா?
முடங்கும் மூச்சு, அடங்கும் முன்னே,
மும்மைத் தெய்வம் தெரிவீரா?
ஆமென்.