பசியாற்றும் இயேசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:12-15.
12 சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13 அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
14 ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
15 அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
இல்லை உணவு என்றாலும்,
இயேசுவின் அடியார் நம்புகிறார்.
எல்லோருக்கும் படியளக்கும்,
இறைமுன் பந்தி அமருகிறார்.
சொல்லால் உணவு படைப்பவரின்,
சீர்மிகு செயலைக் காணுகிறார்.
பொல்லா ஐயம் கொண்டவர்தான்,
புசியாதிருந்து நாணுகிறார்!
ஆமென்.