பஃறுளி ஆறு பாயும் காட்சி,
பார்க்க வேண்டும் அழகின் நீட்சி!
அகமதை அழைக்கும் அரிய காட்சி
ஆண்டவர் காட்டும் அருளின் மாட்சி.
முகமதைத் திருப்பும் முன்னிரு கண்கள்,
முயன்று பாராதிருப்பின் புண்கள்.
இகமிதைத் தந்த இறையின் கண்கள்
இனிமை சொல்ல, இல்லை எண்கள்!
-கெர்சோம் செல்லையா.