நேர்மை உமது தூணாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:12-13.
12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
அரசு வழங்கும் சம்பளம் யாவும்,
ஆண்டவர் அருளும் பேறாகும்.
அதற்கு அடியில் வாங்கும் எதுவும்,
அடித்துச் செல்லும் ஆறாகும்.
உரசி நோக்கி உண்மை தேடின்,
உமக்கு நேர்மை தூணாகும்.
ஊழல் செய்து ஊரை வாங்கின்,
உயரிய வாழ்வும் கூனாகும்!
ஆமென்.