நீண்ட காலப் பணியை முடித்து!
நற்செய்தி மாலை:மாற்கு 13:24-27.
“அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.”
நற்செய்தி மலர்:
நீண்ட காலப் பணியை முடித்து,
நிலவும் வானும் ஓய்வெடுக்கும்.
ஆண்ட காலம் போதும் என்று
ஆதவன்கூட பாய் படுக்கும்.
வேண்டலேற்கும் இறையின் அரசோ,
விண்ணில் இறங்கிக் காட்சி தரும்.
மாண்டவர்கள் மீண்டும் எழும்ப,
மறுமையறிவு புரிய வரும்!
ஆமென்.