நிறைவேறிய இயேசுவின் வாக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:20-22.
20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
கிறித்துவில் வாழ்வு:
என்ன நிகழும் என்றறியாமல்,
எதையோ செய்தல் அறிவீனமே.
முன்னரேசு மொழிந்தபடியே,
முடிவு கண்டது எருசலேமே.
அன்று கேட்ட ஆண்டவரடியார்,
அதன்படித் தப்பி ஓடினாரே.
கொன்று போடும் படைக்குத் தம்மைக்
கொடாது மீட்பு தேடினாரே!
ஆமென்.