நாளை நடப்பதை நாம் அறிவோமா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:32-34.
“அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். அவர், ‘ இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
நாளை நடப்பதை, நாம் அறிவோமா?
நம்பிக்கையால் முன்னறிவோமா?
வேளை அறிந்து, முன்னே விரைந்த,
வேந்தன் வாக்கை, அறிவிப்போமா?
ஆளை மீட்கும், அவரது பணியில்,
அன்பை விதைக்க, முன் வருவோமா?
தாளைப் பணிந்து, நாமும் கேட்டால்,
தருவார் விளைச்சல், பயன் பெறுவோமா?
ஆமென்.
