நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:1-3.
“அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ‘ நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:
ஏட்டை விரித்துக் கதை விளம்பி,
இறைவன் வாக்கைத் தொடுக்கின்றோம்.
கேட்பவர் நிலையும் புரியாமல்,
கிடையாக் காசை எடுக்கின்றோம்.
வேட்டை என்றே வந்துவிட்டோம்;
வேண்டாம், இனி இதைத் தடுத்திடுவோம்.
நாட்படப் பட்டினியாயிருக்கும்,
நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்!
ஆமென்.